அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரிமோட் மூலம் இயக்கப்பட்ட கார் மோதி பலியாகியுள்ளார்.
நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த மைக்கேல் கோஸ்னோவிச் என்ற 21 வயது இளைஞர் நியூயார்க்கின் குயின்ஸ் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மைக்கேல் தனக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார் அவர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கு இடையே அவர் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது அருகில் நின்ற ரிமோட் மூலம் இயங்க கூடிய கார் ஒன்று தானாக நகர தொடங்கியுள்ளது. அந்த கார் எதிரிலிருந்த மைக்கேலை மோதி தள்ளியுள்ளது. இதனால் அருகிலிருந்த மற்றொரு காருக்கும், அந்த ரிமோட் மூலம் இயங்க கூடிய காருக்கும் இடையே சிக்கியுள்ளார். அருகிலிருந்த நபர்கள், மைக்கேலை காப்பாற்ற முயற்சித்து பின்னோக்கி இழுத்தனர். நீண்ட நேர முயற்சிக்கு பின்னர் மைக்கேல் கார்களுக்கு நடுவில் இருந்து வெளியே எடுக்கப்பட்டார்.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மைக்கேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ரிமோட் மூலம் இயங்கும் அந்த சொகுசு காரின் உரிமையாளர் தவறுதலாக காரின் ரிமோட்டை அழுத்திவிட்டார் எனவும், இதனால் தான் அந்த கார் முன்னோக்கி நகர்ந்து மைக்கேல் மீது மோதியள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.