Published on 12/12/2018 | Edited on 12/12/2018

இந்திய வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பிய விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப தடையில்லை என்ற வெஸ்ட்மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் இந்தத் தீர்ப்பு பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தது. அதன்படி இன்று இந்த தீர்ப்பானது வெளியுறவுத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை அமைச்சராகமும் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பினை பரிசீலித்து 2 மாதத்திக்குள் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜய் மல்லையாவிற்கு மேல்முறையீட்டிற்கு இரண்டு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு வார காலம் கழித்தே பரிசீலனை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.