Skip to main content

அமைச்சரவையில் செய்யப்பட்ட மாற்றம்: அதிபர், பிரதமர் உள்ளிட்டோரை கைது செய்த ஆப்பிரிக்க நாட்டு இராணுவம்!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021

 

MALI

 

ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இராணுவத்தினர் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக அந்த நாட்டில் அப்போதிருந்த ஆட்சி கலைந்து, இடைக்கால அரசு ஏற்பட்டது. மாலியின் அதிபராக பா டாவ்வும் பிரதமராக மொக்தார் உவானேவும் பதவியேற்றுக்கொண்டனர். மேலும், ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையை வழிநடத்திய இரு இராணுவ வீரர்கள், இடைக்கால அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றனர்.

 

இந்தநிலையில், நேற்று (24.05.2021) அமைச்சரவை மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இரண்டு இராணுவ வீரர்களும் நீக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இடைக்கால அரசின் அதிபரையும், பிரதமரையும் மாலி இராணுவம் கைது செய்துள்ளது. மேலும் பாதுகாப்புத்துறை மந்திரியும் கைது செய்யப்பட்டுள்ளார். இது அந்த நாட்டில் பதற்றத்தையும், இராணுவ ஆட்சி குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

அதேநேரத்தில் அதிபர், பிரதமர் உள்ளிட்டோரை மாலி இராணுவம் கைது செய்ததற்கு ஐக்கிய நாடுகள் சபையும், ஆப்பிரிக்க யூனியனும் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், கைது செய்யப்பட்ட அதிபர், பிரதமர் உள்ளிட்டோரை உடனடியாக எந்த நிபந்தனையியுமின்றி விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்