
கோவையில் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்துள்ள பட்டணம் புதூர் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார்-சங்கீத தம்பதி. கிருஷ்ணகுமார் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற நிலையில் சங்கீத தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு கல்லூரிக்கு செல்லும் வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் கணவர் கிருஷ்ணகுமார் மகள்கள் இருவரும் கல்லூரிக்கு சென்ற பிறகு மனைவி சங்கீதாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு கேரளாவிற்கு சென்றுள்ளார். பின்னர் கேரளாவில் பாலக்காடு பகுதியில் உள்ள வீட்டிற்கு முன்பு சென்று அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பட்டணம் புதூரில் நடந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்த நிலையில் அங்கு வந்த போலீசார் சங்கீதாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பாலக்காடு மாவட்ட போலீசார் கிருஷ்ணகுமார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சங்கீதா மருத்துவர் ஒருவருடன் முறையிட்ட தொடர்பில் இருந்ததும், இது தொடர்பாக ஏற்கனவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இந்த கொலை நிகழ்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது. கிருஷ்ணகுமாருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.