Published on 08/04/2019 | Edited on 08/04/2019
ரூ. 9,000 கோடி அளவிற்கு இந்திய வங்கிகளிடமிருந்து கடனாக வாங்கி, அதனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிவிட்டு லண்டனுக்கு தப்பி சென்ற விஜய் மல்லையாவின் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததோடு, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தவும் லண்டன் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்தது.
அதன் விளைவாக விஜய் மல்லையாவை நாடு கடத்த வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் அனுமதியளித்தது. இதனையடுத்து லண்டனில் இருந்து நாடு கடத்தும் உத்தரவுக்கு தடை கேட்டு விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு தடை விதிக்க கோரிய விஜய் மல்லையாவின் அந்த கோரிக்கையை நிராகரித்தது லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே கூடிய விரைவில் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் தொடங்கலாம் என கூறப்படுகிறது.