Skip to main content

உபேர் ஹெலிகாப்டர் வந்தாச்சி... பறக்க பைசா எவ்வளவு தெரியுமா..?

Published on 09/10/2019 | Edited on 09/10/2019

அமெரிக்காவில் போக்குவரத்தை குறைக்க உபேர் நிறுவனம் ஹெலிகாப்டர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.அமெரிக்காவில் உள்ள பிரபல உபர் நிறுவனம் பொதுமக்களின் போக்குவரத்து சேவையை மேம்படுத்த புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதற்கான வரவேற்பு பொதுமக்களிடையே தொடர்ந்து கிடைத்து வருகிறது. முதல்முறையாக குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் சேவையை அந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. துவக்கத்தில் இதன் விலை மிகவும் அதிகமாக இருக்கும் என பொதுமக்கள் எண்ணியதால் பெரும்பாலானோர் இதை பயன்படுத்த விருப்பம் தெரிவிக்கவில்லை. ஆனால், பயனுக்கு வந்தபிறகு காரைவிட சற்றே அதிகமான விலை இருப்பதால் தற்போது அனைவரிடமும் வரவேற்பு குவிந்துள்ளது.
 

cvn



முதல் கட்டமாக போக்குவரத்து நெரிசலான பகுதிகளில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக டவுண்டவுன் பகுதியிலிருந்து ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையம் வரை செல்வதற்காக இந்த சேவை பயன்பாட்டில் உள்ளது. பொதுவாக கார் அல்லது பேருந்துகளில் டவுண்டவுனில் இருந்து விமான நிலையம் செல்ல குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஆகும். ஆனால் உபெரின் இந்த ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்தி சென்றால், வெறும் 8 நிமிடங்களில் விமானநிலையத்தை அடையலாம். கட்டணமும் கார் சேவையை விட சற்றே அதிகமாக இருப்பதால் பலர் பயன்படுத்தி வருகின்றனர். ஒரேநேரத்தில் நான்கு முதல் ஐந்து பேர் வரை ஏற்றிச் செல்லும் அளவிற்கு இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மக்களின் வரவேற்பை பொறுத்து ஹெலிகாப்டரில் எண்ணிக்கையை அதிகப்படுத்த உபேர் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்