Published on 22/01/2020 | Edited on 22/01/2020
ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தாக்கம் ஈராக், சிரியா போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் நிலையில், அந்த அமைப்பின் முக்கிய நபரை ஈராக் அரசு தற்போது கைது செய்துள்ளது. அமெரிக்க படைகள் மற்றும் ஈராக் பாதுகாப்பு படையினர் தீவிரமான தேடுதல் வேட்டையில் அடிக்கடி ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவரான அபு அப்துல் பாரி என்பவரை ஈராக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் ஐஎஸ் அமைப்பின் சார்பில் குண்டு வெடிப்புக்களை நிகழ்த்தும் பிரிவுக்கு தலைவர் பொறுப்பேற்றிருந்தார் என்று கூறப்படுகிறது. இவரை கைது செய்த காவல்துறையினர், அவரின் உருவ அமைப்பு பெரியதாக இருந்ததால் அவரை லாரியில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்றனர். இவரின் எடை 250 கிலோ என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.