Skip to main content

இந்தியர்கள் பிரேசில் நாட்டிற்கு செல்ல இனி விசா தேவையில்லை - பிரேசில் அரசு சலுகை

Published on 25/10/2019 | Edited on 25/10/2019


பிரேசில் நாட்டின் அதிபராக இருக்கும் ஜெயிர் போல்சோனாரோ இந்தியர்கள் மற்றும் சீனர்கள் எங்களது நாட்டிற்கு வருவதற்கு விசா கொண்டு வர வேண்டியதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நடப்பாண்டின் துவக்கத்தில் அந்த நாட்டின் அதிபராக ஜெயிர் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் சீனாவுக்கு அதிகாரப்பூர்வமாக செல்ல இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வளர்ந்து வரும் நாடுகள் என்ற அடிப்படையில் சீனா, இந்தியாவுக்கு இந்த சலுகையை அறிவித்துள்ளார்.

நடப்பாண்டின் துவக்கத்தில் அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் விசா எடுக்க வேண்டியதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பை அதிபர் ஜெயிர் வெளியிட்டுள்ளார். பிரேசிலில் இருக்கும் ரியோ டி ஜெனிரோ, சாவ் பாவ்லோ, சல்வாடோர், பிரேசிலா ஆகிய இடங்கள் முக்கிய சுற்றுலா தலங்களாக உள்ளன. 

 

சார்ந்த செய்திகள்