Published on 30/06/2019 | Edited on 30/06/2019
பர்மிங்ஹாமில் இன்று நடந்துவரும் இந்தியா இங்கிலாந்து இடையிலான உலக கோப்பை போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுத்தது.
![India first defeat](http://image.nakkheeran.in/cdn/farfuture/wEzCw1hIrlD_HzeJlRVMqn3JenikwsfGdSz-fwEDS-A/1561916510/sites/default/files/inline-images/M23_0.jpg)
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பேர்ஸ்டோ 111 ரன்களையும், ஸ்ட்ரோக் 79 ரன்களையும், ஜேசன் ராய் 66 ரன்களையும் எடுத்தனர். இந்நிலையில் அடுத்து களமிறங்கும் இந்திய அணி 338 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.