புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்தியா நேற்று பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனை தொடர்ந்து நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இன்று காலை இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்திய எல்லைக்குள் புகுந்த இரண்டு பாகிஸ்தான் விமானங்கள் உள்ளே நுழைய முயற்சி செய்ததாகவும், பின்னர் இந்திய ராணுவ நடவடிக்கையால் அவை திரும்ப சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் இந்திய வான்படையை சேர்ந்த என்.ஐ 17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குளாகி அதில் இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில், "உலக வரலாற்றில் அனைத்து போர்களும் தவறாகவே கணிக்கப்பட்டுள்ளது, யுத்தத்தை ஆரம்பித்த பின் அதனை முடிவுக்கு கொண்டுவருவது கடினம். எனவே, ஆயுதங்களை வைத்திருக்கும் நாமும் அவ்வாறு தவறாக மதிப்பிடலாமா? ஒரு போர் நடந்தால், அது என் அல்லது நரேந்திர மோடியின் கட்டுப்பாட்டில் இருக்காது. பயங்கரவாதத்தை பற்றி எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்த நீங்கள் விரும்பினால், நாங்கள் தயாராக இருக்கிறோம். நாம் உட்கார்ந்து பேச வேண்டும்" என கூறியுள்ளார்.