Published on 28/02/2019 | Edited on 28/02/2019
![fghfggfhf](http://image.nakkheeran.in/cdn/farfuture/zA36yD1l3dsd9PQ_nFjnTcS1pCXbJ-9sb_WXlLaM8rs/1551360948/sites/default/files/inline-images/Abhinandan-std.jpg)
புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்தியா நேற்று பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனை தொடர்ந்து நேற்று முழுவதும் இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் பதட்டம் நிலவியது. தமிழகத்தை சேர்ந்த இந்திய வான்படை பைலட் அபிநந்தன் பாகிஸ்தானில் ராணுவத்தால் பிடிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்திய வீரர் அபிநந்தனை திரும்ப இந்தியா கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழுந்தது. இதற்காக இந்திய அரசு பாகிஸ்தானுக்கான தூதரை வைத்து தனது முயற்சிகளை மேற்கொண்டது. இந்நிலையில் இந்திய வீரர் அபிநந்தனை விரைவில் விடுவிப்பதாக அமெரிக்க தூதரகத்திடம் பாகிஸ்தான் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்கா தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி இந்திய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.