Published on 28/09/2018 | Edited on 28/09/2018

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பப்புவா நியு கினியாவில் ஓடுபாதையிலிருந்து தவறிய விமானம் ஒன்று கடலில்விழுந்து விப்பத்துக்குள்ளாகி உள்ளது. அதிர்ஷ்டவசமாக அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர். சனிக்கிழமை மைக்ரோனேசியா தீவிலிருந்து வேறோரு இடத்திற்கு செல்ல இருந்த விமானம் ஓடுபாதையிலிருந்து தவறி உள்ளது. உடனடியாக வந்த மீட்பு படை வீரர்களால், இந்த விபத்தில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், மீட்புப்படையினருக்கு முன்பாக அருகில் இருந்த மீனவர்கள் வந்த் மீட்பு பணியை செய்துள்ளதும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதற்கு மற்றொரு காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.