Skip to main content

ஹேக் செய்யப்பட்ட ஒபாமா, பில்கேட்ஸ் உள்ளிட்ட பிரபலங்களின் கணக்குகள்...

Published on 16/07/2020 | Edited on 16/07/2020

 

famous peoples twitter accounts hacked

 

உலகின் மிகப்பிரபலமான பல நபர்களின் ட்விட்டர் கணக்குகள் நேற்று மதியம் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டன.

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன், ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி நட்சத்திரம் கிம் கர்தாஷியன், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, எலான் மஸ்க், கன்யே வெஸ்ட், வாரேன் பஃபெட் உள்ளிட்ட பிரபலங்களின் கணக்குகள் நேற்று மதியம் ஹேக் .செய்யப்பட்டன. கணக்குகள் முடக்கப்பட்டுக் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு, இதில் சிலருடைய கணக்குகளிலிருந்து தவறான செய்திகள் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை ட்விட்டர் நிறுவனம் எடுத்தது. அண்மைக்காலமாக பிரபலங்களின் சமூகவலைத்தள கணக்குகளைப் பயன்படுத்தி பிட்காயின் மோசடிகள் அமெரிக்காவில் அதிகளவில் நடந்துவரும் சூழலில், அதேபோன்ற ஒரு மோசடியாக இந்தக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

 

பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளிலிருந்து, 30 நிமிடங்களுக்குள் பிட்காயின் வழியாக நிதி அனுப்புவோருக்கு இரண்டு மடங்கு பணம் கிடைக்கும் என ட்வீட் செய்யப்பட்டு, அதன் மூலம் மோசடிகள் நடைபெற்று வந்தன. எனவே, பிட்காயின் சம்பந்தப்பட்ட மோசடி கும்பலுக்கும், பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதற்கும் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து விசாரணை நடந்து வருவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்