Skip to main content

சமூகவலைதளம் முடக்கம்; இராணுவம் அட்டகாசம் - மியான்மரில் பரபரப்பு

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

myanmar

 

மியான்மர் நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆங் சான் சூகி உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இந்தியாவும் மியான்மரின் நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில், மியான்மரில் பிரபல சமூகவலைதளமான ஃபேஸ்புக்கை முடக்க, அந்த நாட்டு இராணுவம் உத்தரவிட்டுள்ளது. மியான்மரில் நிலைத்தன்மையைக் கொண்டுவரும் பணிகளுக்கு, ஃபேஸ்புக்கில் பரவும் தகவல்கள் இடையூறாக இருப்பதாகக் கூறி அந்நாட்டு இராணுவம், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

 

மியன்மரில் வாழும் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களில், பாதிக்கும் மேற்பட்டோர், அதாவது 27 மில்லியன் மக்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்