"டிக் டாக்" மொபைல் செயலியால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் உட்பட அனனைவரது மத்தியிலும், சமூகத்திலும் மிகப்பெரிய சீர்கேட்டை உருவாக்குகிறது என கூறி மதுரை உயர்நீதிமன்ற கிளை மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த அமர்வு உடனடியாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து "TIK TOK" மொபைல் செயலியை நீக்க உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. உலகம் முழுவதும் 100 கோடி பேர் பயன்படுத்தும் இந்த செயலியை இந்தியாவில் மட்டும் 30 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் இந்த செயலி தடை செய்யப்பட்டதால் ஒரு நாளைக்கு சுமார் 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் நஷ்டமாவதாக தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அந்நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.