ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான மார்க் ஜூக்கர்பெர்க்கின் பழைய ஃபேஸ்புக் போஸ்ட்டுகள் அண்மையில் காணாமல்போய்விட்டன.
மார்க்கின் 2007 மற்றும் 2008ம் ஆண்டின் ஃபேஸ்புக் போஸ்ட்டுகள் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியது, தொழில்நுட்ப தவறுகளால், சிலவருடங்களுக்கு முந்தைய போஸ்ட்டுகள் டெலிட் ஆகிவிட்டது. இது எந்தளவிற்கு சாத்தியம் மற்றும் எவ்வளவு காலம் ஆகும் என தெரியாததால் நாங்கள் அதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் அவரின் பழைய பதிவுகள் ப்ளாக் உள்ளிட்டவைகளில் உள்ளன எனவும் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 2018ல், மார்க் மற்றவர்களுக்கு அனுப்பும் ஃபேஸ்புக் மெசேஜ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு மறையும் வண்ணம் மாற்றியது. இது அவரின் பாதுகாப்பு காரணங்களுக்காகத்தான் என சொல்லப்பட்டது.