Published on 08/01/2021 | Edited on 08/01/2021
உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலை ‘ப்ளூம்பெர்க்’ என்று பொருளாதார ஊடகம் வெளியிட்டு உள்ளது. மேலும், அப்பட்டியல் தினமும், புதிப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில், எலோன் மஸ்க் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், முதலிடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸை, எலோன் மஸ்க் பின்னுக்குத் தள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரானிக் கார்கள் விற்பனை மற்றும் அதன் பங்குகள் மீதான விலை உயர்வு, எலோன் மஸ்க்கை உலகின் நம்பர் 1 பணக்காரராக ஆக்கியிருக்கிறது.
உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில், முதல் 10 இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை. அப்பட்டியலில் இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி 13வது இடத்தில் உள்ளார்.