புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்தியா நேற்று பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனை தொடர்ந்து நேற்று முழுவதும் இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் பதட்டம் நிலவியது.
நேற்று நடைபெற்ற சண்டையில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வான்படை பைலட் அபிநந்தன் பாகிஸ்தானில் ராணுவத்தால் பிடிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரை மீட்டு இந்திய கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை பொது மக்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் ராஜாங்கரீதியான நடவடிக்கைகள் இந்த விஷயத்தில் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
அதன் முதல் படியாக இந்தியாவிற்கான பாகிஸ்தான் துணை தூதரை, நேற்று நேரில் அழைத்து மத்திய அரசு பேசிய நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இந்திய தூதர் பாகிஸ்தான் அரசாங்கத்திடம் பேசியுள்ளார். இந்திய விமானி அபிநந்தனை உடனடியாக இந்தியாவிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் நேரில் சென்று பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் நேரில் வலியுறுத்தியுள்ளார்.