தன் அழுக்கு சாக்சை நுகர்ந்து பார்த்ததால் வாலிபர் ஒருவருக்கு நுரையீரல் தொற்று நோய் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருக்கிறார். மருத்துவ பரிசோதனையில், நுரையீரல் சம்பந்தமான பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிறகு எக்ஸ்-ரே எடுத்து பார்க்கையில், அவருக்கு நுரையீரல் வைரஸ் தொற்றுநோய் ஏற்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
நுரையீரலில் எவ்வாறு அவருக்கு தொற்றுநோய் ஏற்பட்டது குறித்து மருத்துவர்கள் ஆராயும்போது அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயம் ஒன்று தெரியவந்துள்ளது. அந்த இளைஞருக்கு, தான் தினமும் பயன்படுத்திய அழுக்கு சாக்சை நுகர்ந்து பார்க்கும் வினோதமான பழக்கம் இருந்து வந்துள்ளது. அந்த பழக்கத்தின் காரணமாகவே நுரையீரல் வைரஸ் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அழுக்கு சாக்ஸ் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது இதுவே முதல்முறை என்று குறிப்பிட்டுள்ளனர்.