![gfhgfhgfhfg](http://image.nakkheeran.in/cdn/farfuture/dW71S_3jV-dWLb68CY1D3RBX63Jf5e-EBvJM9oj4gGQ/1551278810/sites/default/files/inline-images/download-%2815%29-std.jpg)
புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்தியா நேற்று பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனை தொடர்ந்து நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் இன்று காலை இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்திய எல்லைக்குள் புகுந்த இரண்டு பாகிஸ்தான் விமானங்கள் உள்ளே நுழைய முயற்சி செய்ததாகவும், பின்னர் இந்திய ராணுவ நடவடிக்கையால் அவை திரும்ப சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சமயத்தில் இந்திய வான்படையை சேர்ந்த என்.ஐ 17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குளாகி அதில் இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து சீனா இரு நாடுகளுக்கும் கோரிக்கை ஒன்றை வலியுறுத்தியுள்ளது.
அதில் "இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. தற்போதைய இந்த பிரச்சினையை இந்தியா மற்றும் பாகிஸ்தான் மிகவும் கவனமாக கையாள வேண்டும். சுமூகமான நடவடிக்கை எடுத்து அமைதியாக இருக்க வழி செய்ய வேண்டும்" என இருநாடுகளுக்கும் வலியுறுத்தியுள்ளது.