ஆசியாவின் நாகரிகம் , கலாச்சாரம் போன்ற நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில் சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா இன்று தொடங்கியது. இந்த விழாவை சீன அதிபர் ஸி ஜின்பிங் தொடங்கி வைத்தார். 'இளைஞர்களின் கொண்ட்டாட்டம் ஆசியாவின் கனவு என்ற தலைப்பில்' நடக்கும் விழாவில் உலகெங்கும் உள்ள கலைஞர்கள் திருவிழாவில் பங்கேற்று தங்கள் நாட்டின் பாரம்பரியத்தை பறைச்சாற்றினர். மேலும் ஒரே இடத்தில வண்ண மையமாக திருவிழா நடைப்பெற்று வருகிறது.
இந்த விழாவில் முக்கிய விருந்தினராக பிரபல நடிகர் ஜாக்கிசான் பங்கேற்று குங்பூ சண்டையின் சில அசைவுகளை செய்துக்காட்டினார். சீனாவில் நடைப்பெற்று வரும் விழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்று கலாச்சார திருவிழாவை கண்டுக்களித்தனர். ஆசிய கண்டத்தில் உள்ள 47 நாடுகளின் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று தொடங்கிய இந்த கலாச்சார திருவிழா 22 ஆம் தேதி வரை நடைப்பெற உள்ளது. அதே போல் சீன அதிபர் ஆண்டுதோறும் இந்த விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.