Skip to main content

மூழ்கும் அபாயம்... சூழியல் ஆர்வலர்களை அச்சத்திற்குள்ளாக்கிய ஏ76 உடைப்பு! 

Published on 20/05/2021 | Edited on 20/05/2021

 

A76 breakout scares eco-enthusiasts!

 

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று உடைந்து கடலில் மிதப்பது சூழியல் ஆர்வலர்கள் மத்தியில் கவனத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

உலகப் பந்தின் தென்பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய கண்டமான அண்டார்டிகாவில் பனி பாறைகள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது. புவி வெப்பமயமாதலை இந்த பனிபாறைகள் தடுத்து வருகின்றன. ஆனால் மனிதனின் நவீன வாழ்வியல் முறைகள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக வெப்பம் அதிகரித்து பனிப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இப்படி கடல் மட்டம் உயர்வதால் பல நகரங்கள் மூழ்கும் அபாயம் உள்ளது. இந்நிலையில் அண்டார்டிகாவில் 4,320 சதுர கிலோ மீட்டர் அளவு கொண்ட ஒரு பனிப்பாறை உடைந்து பிரிந்து கடலில் மிதக்கத் தொடங்கியுள்ளது. ஒப்பிட்ட அளவில் புதுதில்லி நகரத்தை போன்ற மூன்று மடங்கு அளவு பெரிதான இந்தப் பாறைக்கு ஏ76 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பனிப்பாறையானது 170 கிலோ மீட்டர் நீளமும், 25 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. உலகமே கரோனாவை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் சூழலில் அண்டார்டிகாவில் பனிப்பாறை உடைந்து கடலில் மிதப்பது சூழியல் ஆர்வலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்