corona

கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலகெங்கும் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அனைத்து நாட்டு அரசுகளும் ஊரடங்கு உட்பட பல தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் தற்போது பிரேசில் நாட்டில் கடந்த 24 மணிநேர பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 14,521 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதன் மூலம் அந்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,137,521 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் பலி எண்ணிக்கை 447 ஆக பதிவாகி மொத்த பலி எண்ணிக்கை 1,26,650 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

கரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பிரேசிலில், கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 33 லட்சத்தை கடந்துள்ளது.