ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் கட்டிடம் கட்டும் பணிக்காக குழி தோண்டியபோது, சுமார் ஐநூறு கிலோ எடையுள்ள வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டது.
இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா, பிரிட்டன் கூட்டுப்படைகள் வீசிய பல குண்டுகள் இன்னும் வெடிக்காமல் ஜெர்மனி முழுவதும் மண்ணுக்குள் புதைந்துள்ளன. அப்படி ஒரு குண்டுதான் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 500 கிலோ எடை உள்ள இந்த குண்டு, பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
பின்னர் இதனை செயலிழக்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 16,000 பேர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்க்கப்பட்டனர். ரயில், பேருந்து சேவைகள் மாற்றியமைக்கப்பட்டு, நேற்று இந்த குண்டு செயலிழக்க வைக்கப்பட்டது. ஜெர்மனி முழுவதும் இதுமாதிரியான இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட ஆயிரக்கணக்கான வெடிக்காத குண்டுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.