
மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி டேவிராஜ். 30 வயதான இவர் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் டேவிட்ராஜ் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மதுரை அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு உணவு டெலிவரி செய்யச் சென்றுள்ளார்.
அப்போது அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் நின்றுகொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு டேவிட் ராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் சிறுமிக்கு டேவிட்ராஜ் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் டேவிட் ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போக்சோ' வழக்கில் கைது செய்தனர்.
உணவு டெலிவரி செய்யச் சென்ற இளைஞர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.