தடுப்பூசி போட பயந்து இளைஞர் ஒருவர் மரத்தின் மீது அமர்ந்த சம்பவம் புதுவையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கரோனா ஏற்படுத்திய தாக்கம் மிதமாக குறைந்துவந்த நிலையில் தற்போது புதிய வகை கரோனாவாக ஒமிக்ரான் தொற்று பல மாநிலங்களில் மிக வேகமாகப் பரவிவருகிறது. இதனால் 5க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் கேரளா, கர்நாடகாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்திலும் அதே போன்று இரவு நேர ஊடரடங்குக்கு வாய்ப்பு இருக்கமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த துரித கதியில் கரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. இந்நிலையில், புதுவை மாநிலம் வில்லியனுரில கரோனா தடுப்பூசி செலுத்த வந்த செவிலியரைக் கண்டதும் இளைஞர் ஒருவர் அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி அமந்தார். செவிலியர்கள் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அவர் கீழே இறங்குவதாகத் தெரியவில்லை. மேலும் செவிலியரிடம் நீங்கள் மேலே வந்து வேண்டுமானால் தடுப்பூசி போடுங்கள் என்று அந்த இளைஞர் நர்ஸிடம் கேட்டுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகிவருகிறது.