ஆண்டுதோறும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக இதய தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை நடத்தும் இலவச இதய பரிசோதனை முகாமை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தொடங்கிவைத்தார். இச்செயல்திட்டத்தை தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பி.கே. சேகர் பாபு கூறியதாவது, “சரியான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது, உரிய நேரத்தில் உடல்நல சிகிச்சையைப் பெறுவதன் வழியாக ஆரோக்கியமான இதயத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் பற்றி ஒவ்வொரு நபருக்கும் நினைவூட்டுவதாக இந்த நாள் இருக்கிறது. உயிர்களைக் காப்பாற்றுவதில் உரிய நேரத்தில் நோய் கண்டறிவதும், சிகிச்சை பெறுவதும் மிக முக்கிய பங்கை ஆற்றுகிறது” என கூறினார்.
இச்செயல்திட்ட அறிமுக விழாவின்போது பேசிய சென்னை காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும், செயல் தலைவருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ், “ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு, ஆரோக்கியமான இதயம் இன்றியமையாதது. அதைப்போலவே, ஆரோக்கியமான இதயம், வாழ்க்கையை நடத்த அத்தியாவசிமானது. நாங்கள் நடத்துகின்ற இந்த சுகாதார முகாம்கள், மக்களுக்கு இந்த விழிப்புணர்வு பற்றி எடுத்துரைக்கும் மற்றும் இதன் மூலம் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ளலாம். ஆகவே இந்த உலக இதய தினத்தன்று, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதன் மூலம் நமது இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்கவும் மற்றும் தேவைப்படும்போது மருத்துவ சிகிச்சையை தாமதமின்றி பெறவும் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உறுதிமொழி ஏற்போம்” என்று கூறினார்.