


Published on 17/11/2021 | Edited on 17/11/2021
மறைந்த திரைப்பட இயக்குநரும், நடிகருமான ஆர்.என்.ஆர்.மனோகர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (17/11/2021) மாலை சென்னையில் உள்ள ஆர்.என்.ஆர். மனோகர் வீட்டிற்கு சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மாலை வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், மனோகரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நடிகர் ஆர்.என்.ஆர் மனோகர், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.