Published on 28/09/2019 | Edited on 28/09/2019
தற்போது சென்னையில் டெங்கு போன்ற மர்ம காய்ச்சல் பாதிப்புகள் வரும் அதிகரித்து நிலையில் கொசு உற்பத்தியாகும் வகையில் அலுவலகங்கள் வீடுகள் இருந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொசு உற்பத்தியாக காரணமாக இருக்கும் வீடு, அலுவலக கட்டிட உரிமையாளர்களுக்கு ரூபாய் 5000 முதல் 1.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் இதுவரை 27 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பே மரங்களில் விளம்பர பதாகைகள் வைக்க கூடாது, அப்படி வைக்கப்பட்டிருந்தால் நீக்க வேண்டும் என்றும், பேனர்கள் வைப்பதற்கு நெறிமுறைகளையும் வகுத்து எச்சரிக்கை கொடுத்து சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.