



Published on 21/05/2022 | Edited on 21/05/2022
பல ஆண்டுகளாக தற்காலிகப் பணியாளர்களாக பணியாற்றிவரும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான துப்புரவு தொழிலாளர்கள் தங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றக்கோரி சென்னை, எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கத்தில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். துப்புரவு தொழிலாளர்களின் போராட்டக் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.