Skip to main content

சவுதியில் இறந்த தொழிலாளி; உடலைக் கொண்டு வர ஆட்சியர் நடவடிக்கை

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
Worker who lose their live in Saudi; Collector action to bring body

சவுதியில் இறந்த தொழிலாளி உடலை மீட்க அயலக தமிழர் மறுவாழ்வு ஆணையரகம் மூலம் ஆட்சியர்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம் ஆத்தங்கரைவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. கடந்த 4 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 14 ந்தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். அவரது உடல் மருத்துவமனையில் உள்ளது என்று அண்ணாமலை வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த தகவலைக் கேட்டு கதறித்துடித்த அண்ணாமலை மனைவி பாசமலர் மற்றும் உறவினர்கள் அண்ணாமலை உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவிடம் மனு கொடுத்துள்ளனர். இந்த மனு மீதான நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா சென்னையில் உள்ள அயலகத் தமிழர் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் மற்றும் பொது மறுவாழ்வுத்துறை (2) அரசு செயலர் ஆகியோருக்கு நடவடிக்கை கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

பிழைப்பிற்காக வெளிநாடு சென்று அங்கு இப்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை தவிக்க விடாமல் இறந்தவர் உடலை உடனே மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் உறவினர்கள்.

சார்ந்த செய்திகள்