புதுக்கோட்டை மாவட்டம் தொகுதிக்குட்பட்ட மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கரை கும்பகோணத்தைச் சேர்ந்த பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தங்கள் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டி வருகின்றனர். ஆகவே பாரபட்சமில்லாமல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி அமைச்சரை முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த கீரனூர் டி.எஸ்.பி பிரான்சிஸ் மாத்தூர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்ததை நடத்தினர்.

ஆனாலும் பெண்கள் கலைந்து செல்லவில்லை. இந்த நிலையில் மிதிவண்டி நிகழ்ச்சியை முடித்துவிட்டு முற்றுகையிட்ட பெண்களை அழைத்து அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி பாரபட்சமின்றி அனைவருக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இலுப்பூர் கோட்டாச்சியர் ஜெயபாரதி ஆர்ஐ உடன் இருந்தனர் இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.