Skip to main content

அரசு இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் முகவரி நீக்கம்: திமுக வழக்கு!

Published on 05/08/2017 | Edited on 05/08/2017
அரசு இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் முகவரி நீக்கம்: திமுக வழக்கு!

தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் தொலைப்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகளை நீக்கியதை எதிர்த்து திமுக - எம்.எல்.ஏ. சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் தொலைப்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் திடீரென கடந்த மாதம் 21ம் தேதி நீக்கப்பட்டன.

இதை எதிர்த்து மதுரை மத்தி தொகுதி தி.மு.க - எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த மனுவில், மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் குறித்து தகவல் வழங்கும் ஆதாரமாக அரசு இணையதளம் விளங்குகிறது. எந்த காரணமும் தெரிவிக்காமல் அதில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களின் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் நீக்கியது சட்டவிரோதமானது. பொறுப்பான அதிகாரி, இச்செயலை செய்திருக்க மாட்டார். ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கும், வெளிப்படை தன்மைக்கும் எதிரானது. அந்த விவரங்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன், திங்கள் அன்று விசாரணைக்கு வருகிறது.

- சி.ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்