Skip to main content

தீர்ப்பு பற்றி கவலையில்லை;20 தொகுதிகளை காலியாக வைத்திருக்காதீர்கள் - வைகோ!!

Published on 25/10/2018 | Edited on 25/10/2018

 

VAIKO

 

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 18 எம்.எல் .ஏக்கள் தீர்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில்,

 

18 எம்.எல்.ஏக்களை நீக்கியது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்கள் இந்த தீர்ப்பிற்கு மேல்முறையீடு செய்கிறார்களா? இல்லையா? என்பது குறித்து எங்களுக்கு அக்கறையும் இல்லை கவலையும் இல்லை. ஆனால் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகள் உட்பட இந்த 18 தொகுதிகளும் சேர்த்து மொத்தம் 20  தொகுதிகளில் எம்.எல் ஏக்கள் இல்லாத நிலை இருக்கிறது. அந்த தொகுதிகளில் எந்த பணிகளும் நடைபெறாமல் இருக்கும் நிலை இருக்கிறது. எனவே ஜனநாயக நிலையை கருதி அந்த 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் உடனடியாக மாநில தேர்தல் ஆணையம் நடத்தவேண்டும்  20 தொகுதிகளை காலியாக  வைத்திருக்காதீர்கள் என மதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன் எனக்கூறினார்.   

சார்ந்த செய்திகள்

 

Next Story

கேரளாவிற்குச் சுற்றுலா சென்ற மாணவர் உயிரிழப்பு; துரை வைகோ எம்பி-யின் துரித நடவடிக்கை!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
tn student who passed away Kerala sent his hometown by action Durai Vaiko

பட்டயக் கணக்காளருக்கு படித்து வரும் மதுரையைச் சேர்ந்த 12 மாணவர்கள் நேற்று(20.6.2024) இரவு கேரளா மாநிலம் வர்காலாவுக்கு சுற்றுலாவாகச் சென்றுள்ளார்கள். 12 பேரில் 7 பேர் மாணவர்கள், 5 பேர் மாணவிகள். பட்டயக் கணக்காளர் படிப்புக்கான இடைநிலை தேர்வை முடித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் இன்று(21.6.2024) காலை வர்காலாவில் உள்ள கடலுக்குச் சென்றுள்ளார்கள். கடலில் மாணவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தபோது ரகு என்ற மாணவனை கடல் அலை உள்ளே இழுத்துச் சென்று விட்டது. பிறகு, உயிருக்கு ஆபத்தான நிலையில் ரகுவின் உடல் கரை ஒதுங்கியிருக்கிறது.

ரகுவின் உடலைப் பார்த்த மாணவர்கள் உடனடியாக அங்கிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி ரகு உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த  ம.தி.மு.க முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, உடனடியாக திருவனந்தபுரம் ஆட்சித் தலைவரை தொடர்பு கொண்டு பேசினார். ரகுவின் நிலைமையை எடுத்துச் சொல்லி மற்ற மாணவர்களையும் பாதுகாப்பாக தமிழகம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். 

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் உதவியாளரையும் தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று உதவிடுமாறு தெரிவித்து உள்ளார். அவரும் மாணவர்களை பத்திரமாக தமிழகம் அனுப்பும் பணியை ஒருங்கிணைத்து வருகின்றார். துரை வைகோவின் கோரிக்கையை ஏற்று திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக அப்பகுதி வட்டாட்சியரை நேரில் அனுப்பி உள்ளார்.

எதிர்பாராத விதமாக இறந்த ரகுவிற்கு பிரதப் பரிசோதனை உள்ளிட்ட நடைமுறைகளை விரைந்து முடிக்கவும், மற்ற மாணவர்களைப் பாதுகாப்பாக தமிழகம் அனுப்பி வைக்கவும் திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியரிடம் துரை வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், தமிழக மாணவர்களைப் பத்திரமாக அனுப்பும் பணியில் துரிதமாக செயல்பட்ட திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் உதவியாளருக்கும் துரை வைகோ நன்றி தெரிவித்துக் கொண்டார். நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றுள்ள சசி தரூருக்கு துரை வைகோ தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

Next Story

'சீமானை பாராட்டத்தான் வேண்டும்'-துரை வைகோ பேட்டி

Published on 07/06/2024 | Edited on 07/06/2024
'Seeman should be appreciated' - Durai Vaiko interview

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மதிமுக திருச்சி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. அங்கு போட்டியிட்ட துரை வைகோ வெற்றி பெற்ற நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு இந்த எளியவன் துரை வைகோ பாடுபடுவேன் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை திருச்சி மட்டுமல்ல புதுவையும் உட்பட்ட 40 தொகுதிகளிலும் 100 விழுக்காடு வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றுள்ளோம்.

பாஜக அணி 18 விழுக்காடு வாக்குகள் வாங்கி இருக்கிறார்கள். பாஜக தனியாக நின்றிருந்தால் மூன்று விழுக்காடு வாக்குகள் தான் வாங்கி இருப்பார்கள். பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருக்கிறது. அந்த கூட்டணி கட்சிகளின் வாக்கு எல்லாம் சேர்ந்து தான் 18 சதவிகிதம். தனியாக பாஜக நின்றிருந்தால் போன முறை வாங்கிய மூன்று சதவீதத்தை தாண்டி இருக்க முடியாது. எனவே பாஜகவினர் அவர்களே அவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை அரசியல் சித்தாந்தங்களில் வேறுபடலாம். ஆனால் சகோதரர் சீமானை பொறுத்த வரைக்கும் வேறுபட்ட கொள்கைகள் இருந்தாலும் தனியாக நின்று இவ்வளவு வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அதை நாம் பாராட்ட செய்யதான் வேண்டும்'' என்றார்.