
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த நான்கு தினங்களாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இந்த மழை இன்னும் தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்றது போல் வெள்ள பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு 100 கன அடியாக குறைந்துள்ளது. இருந்த போதிலும் பாதுகாப்பு கருதி 2000 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுவதாக அதிகாரிகள் தெரித்துள்ளார்கள். இதனால் சென்னைக்கு வெள்ள அபாய பாதிப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.