Published on 19/02/2022 | Edited on 19/02/2022

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு இடையே நடைபெறும் தேர்தல் என்பதால் வாக்குப்பதிவு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை தி.நகரிலுள்ள வித்யோதயா பள்ளியில் வி.கே.சசிகலா தனது வாக்கைச் செலுத்தினார். வாக்களித்துவிட்டு வெளியே வந்த சசிகலா, ஜெயலலிதா இல்லாமல் முதல்முறையாக வாக்களித்தது கஷ்டமான சூழல் என உருக்கமாகத் தெரிவித்தார்.