Published on 23/10/2019 | Edited on 23/10/2019

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் முருகன், கருப்பசாமி ஆஜரான நிலையில் நிர்மலா தேவி ஆஜராகவில்லை. இந்நிலையில் நிர்மலாதேவி சார்பில் நீதிமன்றத்தில் விடுப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கை நவம்பர் 18- ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்று முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.