Skip to main content

அதிமுக மீது கேப்டனின் கர்.. புர்.. கோபம்

Published on 30/07/2019 | Edited on 30/07/2019

 

நடைபெறவுள்ள வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பிரச்சாரத்திற்கு தங்களை முறைப்படி அழைக்க வேண்டுமென தேமுதிக தலைமை அதிமுகவிடம் முதலில் கோரிக்கை வைத்தது . அதன் பிறகு அங்கு போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவரான ஏ. சி. சண்முகம்,  விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.  அப்போது விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், பிரச்சாரத்திற்கு கேப்டன் வர முடியாவிட்டாலும் நான் வருகிறேன்.  மேலும் கூட்டணிக் கட்சியான அதிமுக தலைமை நடத்தும் பொது கூட்டத்தில் நான் பேசுகிறேன்.  இதை அதிமுகவிடம் கூறுங்கள் என்று சொல்லியிருந்தார் .

 

v

 

அப்போது ஏசி சண்முகம் அதிமுக தலைமையிடம் பேசுகிறேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.  அதன் பிறகு அதிமுகவிடமிருந்து எந்த தகவலும் தேமுதிகவுக்கு வரவே இல்லை. தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதாக இருந்தால் தனியாக சென்று பிரச்சாரம் செய்து கொள்ளுங்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக அதிமுகவிலிருந்து பிரேமலதாவுக்கு தகவல் போயிருக்கிறது.   இதனால் கடுப்பான பிரேமலதா,  சென்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு நம் கட்சியை அதிமுக ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று கேப்டன் விஜயகாந்திடம் வேதனையோடு கூறியிருக்கிறார்.

 

d

 

வாக்குப்பதிவு நெருங்கி வரும் இந்த சூழ்நிலையிலும் பிரச்சாரத்திற்காக அதிமுகவிடமிருந்து தேமுதிகவை அழைக்கும் எந்த நோக்கமும் அதிமுகவிடம் இல்லாததால் கோபமுற்ற விஜயகாந்த்,  இந்த ஆட்சியில் குப்பை கூளங்கள் அதிகமாக இருக்கிறது என்பதை இன்று வெளியிட்ட தனது அறிக்கையில் கண்டனமாக கூறியிருக்கிறார்.   நகரெங்கும்  குப்பை பெருத்துவிட்டது தூய்மைப்படுத்துங்கள் என விஜயகாந்த் கூறியிருப்பது என்னவோ ஊராட்சி, நகராட்சிகளில் என்றாலும் இது அதிமுகவை நோக்கி அவர் வீசிய கண்டன ஆயுதமாக தான் உள்ளது என்று தேமுதிகவினர் கூறுகிறார்கள்.

 

 முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் மீது கேப்டனுக்கு மிகுந்த கோபம்  இருக்கிறது என்று  அக்கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் கூறுகிறார்கள்.  கூட்டணி என்பது ஒன்றிணைந்து செல்வது. ஆனால் தேமுதிகவை அதிமுக தீண்டாமல் இணையாமல் இந்த இடைத்தேர்தலை சந்திக்கிறது.  இதே நிலை நீடித்தால் கேப்டனின் கலகக்குரல் இந்த ஆட்சிக்கு எதிராக இனி அடிக்கடி வெளிப்படும் என்கிறார்கள் தேமுதிகவினர்.

சார்ந்த செய்திகள்