Skip to main content

ப.சிதம்பரத்திடம் 7 மணி நேரம் விசாரணை!

Published on 05/06/2018 | Edited on 05/06/2018
P Chidambaram


ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிப்பதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதில் ரூ.3,500 கோடி அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்க பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று (05.06.2018) ஆஜராகும்படி அமலாக்கத்துறை, ப.சிதம்பரத்திற்கு 'சம்மன்' அனுப்பியிருந்தது. இதனையடுத்து இன்று காலை டெல்லியில், அமலாக்கத்துறை அலுவலகத்தில், சிதம்பரம் நேரில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை 7 மணி நேரம் நடத்தினர்.

 

 


முன்னதாக, சிதம்பரம் கோரியிருந்த முன் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும், சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை ஜூலை 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.  

சார்ந்த செய்திகள்