![vijay wishes anbumani ramadoss regards his birthday](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ab0_7Ot16YHv4-16XmFZxG35YxugEU7AcFz7WWLPsjU/1728459081/sites/default/files/inline-images/27_83.jpg)
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள், பா.ம.க. தொண்டர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டவர்கள் தங்களது எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து பதிவை பகிர்ந்திருந்தனர். இதனிடையே இயக்குநர் தங்கர் பச்சனும் ட் ஹனது எக்ஸ் பக்கத்தில் அன்புமணி ராமதாஸூக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் தற்போது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைப்பேசி மூலமாக அன்புமணியைத் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார். அப்போது அன்புமணியும் விஜய்க்கு அவர் நடத்தவுள்ள முதல் மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் கலந்துரையாடல் 5 நிமிடங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் போன வருட அன்புமணி பிறந்தநாளுக்கு தொலைப்பேசி வாயிலாக விஜய் வாழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.