சர்கார் பட பிரச்சனை தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,
’’விலையில்லா அரிசி, மடிக்கணினி உள்ளிட்ட திட்டங்களை அம்மா கொண்டு வந்தார். அதை மக்களும் ஏற்றுக்கொண்டு பயன்பெற்று வருகிறார்கள். அதை கொச்சைப்படுத்தியிருப்பதை புரிந்துகொண்டு அந்த காட்சிகளை நீக்க முன்வந்துள்ளார்கள். இது வரவேற்கத்தக்கது.
ரஜினி நடித்த சிவாஜி படத்தை அப்போதைய ஆளூங்கட்சி தரப்பினருக்கு கொடுக்கவில்லை என்பதற்காக அப்படத்தின் ரிலீஸ் அன்று சிடியை ரிலீஸ் செய்தார்கள் ஆளூங்கட்சி தரப்பினர். அது மாதிரி ஆட்சி இப்போது இல்லை. அரசு இந்த படத்திற்கு எதிராக நடக்காது. முதல்வரே சர்கார் திரைப்படம் திரையிட்டு தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கச்சொல்லியிருக்கிறார்.
அருமைத்தம்பி விஜய் நல்ல நடிகர். எதிலும் முத்திரை பதிக்க வேண்டும் என்று நினைப்பவர். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை ஏற்கனவே அவர் வாழ்த்தியுள்ளார். அப்படி இருக்கும்போது இப்போது மக்களுக்கு பயன் தரும் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ள இலவச திட்டங்களுக்கு எதிரான காட்சியில் விஜய் நடித்தது மன்னிக்க முடியாதது’’என்று பதிலளித்துள்ளார்.