நடிகர் விஜய் பிரச்சனை முழு அரசியலாக்கப்பட்டு வரும் நிலையில் அவரது ரசிகர்களும் அரசியலாகவே பாரக்கத் தொடங்கியுள்ளனர்.
![vijay](http://image.nakkheeran.in/cdn/farfuture/x11mj2ImOwSSWMDtdV2xNGYNjWgpVHHezHcYU1E2MUM/1581581394/sites/default/files/inline-images/degfgfg.jpg)
இந்த நிலையில் புதுக்கோட்டையில் மாஜி மாவட்டத் தலைவர் மாஸ்கோ ஒட்டியுள்ள போஸ்டர் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில்... அரசியல்வாதிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். விஜய் எங்களுக்கு மாஸ்டர் ஆகவே இருக்க விரும்புகிறோம். தயவு செய்து உங்களுக்கு ஹெட் மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள் என்ற போஸ்டர் புதுக்கோட்டை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
![jj](http://image.nakkheeran.in/cdn/farfuture/BNc_FayyvGv8u3lfhx86Oo0ejmXCjmU5S_4EhUO3bBM/1581581428/sites/default/files/inline-images/IMG-20200213-WA0139_0.jpg)
இது குறித்து ஸ்டாலின் மாஸ்கோ கூறும் போது.. விஜய் ரசிகனாக இருந்து மாவட்டத் தலைவர் வரை பதவி வகித்தவன். அவரது உத்தரவுகளுக்கிணங்க மக்கள் நலப்பணிகள் செய்தவன். அதனால தான் மக்கள் இயக்கம் புதுகோட்டையில் மாநாடு நடத்தி தொடங்கினோம். அவர் அவரது வழியில் போய்க் கொண்டிருக்கும் போது அவரை அரசியல்வாதிகள் வம்புக்கு இழுப்பதை எங்களால் ஏற்க முடியவில்லை. அதனால் தான் எங்கள் மாஸ்டரை உங்கள் ஹெட் மாஸ்டர் ஆக்கிடாதிங்கன்னு போஸ்டர் ஒட்டினோம். மெய்யான ரசிகர்கள் அவருடன் நிற்போம். அதுக்கு நெய்வேலி ஒரு சான்று என்றார்.