வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள நெக்கனா என்கிற மலைப்பகுதி உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமாக 9 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலைத்தின் ஒருப்பகுதியில் கஞ்சா பயிரிட்டு வளர்த்து வந்துள்ளார் ஜெய்சங்கர். இந்த தகவல் கடும் குற்றவாளிகளை கண்காணிக்கும், திட்டமிட்டு குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு வடக்கு மண்டல துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரனுக்கு தெரியவந்துள்ளது. அவர் தனது பிரிவின் காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் தலைமை காவலர்கள் சண்முகம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் கூறி உறுதி செய்யச்சொல்லியுள்ளார்.
அவர்களும் சில நாட்கள் சாதாரண ஆட்கள் போல் மலைக்கு சென்று அந்த நிலத்தை கண்டுபிடித்து கஞ்சா பயிரிடுவதை உறுதி செய்துள்ளனர். அதன் அடிப்படையில் நவம்பர் 21ந்தேதி மாலை காஞ்சா பயிர் செய்த நிலத்தின் உரிமையாளர் ஜெய்சங்கரை, திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு போலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஜெய்சங்கரிடம், கஞ்சா பயிர் செய்வதற்கான யோசனை எப்படி வந்தது ?, அதனை யார் வந்து வாங்கி செல்கிறார்கள் ? தொழில் தொடர்புகள் என்னனென்ன என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.