திருச்சி நகர் மா.செ.வாக இருந்தவர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். அடிக்கடி உடல் நலக்கோளாறு ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார். இந்த நிலையில் தான் புதிய மா.செ.வாக திருச்சி எம்.பி. குமாரை அறிவித்துள்ளது கட்சி தலைமை. இந்த அறிவிப்பை ர.ர.க்கள் ஏற்கவில்லை. புதுக்கோட்டையை சேர்ந்தவருக்கு திருச்சிக்கு எம்.பி. சீட் கொடுத்த போதே எதிர்த்தோம். அப்ப அம்மாவும் வெல்ல மண்டியும் தான் எல்லோரையும் சமாதானம் செய்தனர். ஆனா இப்ப மா.செ. பதவி கொடுத்திருப்பதை ஏற்க முடியாது.
7 பகுதி செயலாளர்களில் 6 பேர் வெல்லமண்டிக்காக பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பி உள்ளனர். கடிதம் அனுப்பியதுடன் குமார் எம்.பி.க்கு உதவியதாக கவுன்சிலர் கார்த்திக் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்திய வெல்லமண்டி தனது ஆட்களை சமாதானம் செய்தாலும் மா.செ. மாற்றம் பற்றி ஒ.பி.எஸ். - எடப்பாடி யாரும் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்கிறார்.
அவரது ஆதரவாளர்களோ. மா.செ. பதவியை மீண்டும் வெல்லமண்டிக்கே கொடுக்க வேண்டும், இல்லையென்றால் திருச்சி நகர அ.தி.மு.க. உடையும் என்கின்றனர் ஆதங்கமாக.
மகேஷ்