Skip to main content

வேளாங்கண்ணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!!

Published on 29/08/2018 | Edited on 29/08/2018

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திருவிழா கோடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.

நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரன்யம் செல்லும் வழியில் வங்க கடலோரம் அமைந்துள்ளது வேளாங்கண்ணி பேராலயம். பிரசித்தி பெற்ற இந்த பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக திகழந்துவருகிறது. எல்லா மதத்தினரும் வந்து வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இருந்துவருகிறது.

 

The Velankanni festival begins with the flag

 

 

 

பசிலிக்கா என்ற பெருமைமிகு பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஐந்து கிறிஸ்தவ கோவில்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்றாகும். ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழாவினை பேராலயத்தின் ஆண்டு திருவிழாவாக வருடம்தோறும் 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். 

 

 இந்த ஆண்டு பேராலய ஆண்டு திருவிழா இன்று 29 ம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.  மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடியுடன் பேராலய முகப்பில் இருந்து ஊர்வலம் எடுத்துச்செல்லப்பட்டு கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை மாலை 6 மணிக்கு வந்தடைந்தது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியை ஏற்றி துவக்கிவைத்தார். தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

 

The Velankanni festival begins with the flag

 

 

 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி வருகிற 7-ந் தேதிவெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 8-ந் தேதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 

 

திருவிழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்