Published on 25/04/2020 | Edited on 25/04/2020
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் காய்கறி சந்தை, மளிகை கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் முழு ஊரடங்கு காலத்தில் தற்காலிக காய்கறி கடைகள், மளிகை கடைகள் போன்றவை செயல்பட தடை எனவும், மதுரை மாநகராட்சியில் இறைச்சிக்கடை, மீன் விற்பனை கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.