Published on 30/06/2018 | Edited on 30/06/2018

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு வரும் 16-ஆம் தேதியுடன் 29-ம் ஆண்டு நிறைவடைந்து 30-ஆம் ஆண்டு தொடங்கவுள்ளது. பா.ம.க.வின் 30-ஆம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி, சென்னையில் நாளை (01.07.2018) நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பா.ம.க. கொடி ஏற்றப்படவுள்ளது.
சென்னை கலைஞர் கருணாநிதி நகர் மேற்குப் பகுதியில் புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில் நாளை காலை 11.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பா.ம.க. இளைஞர் அணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி இராமதாஸ் பா.ம.க. கொடியை ஏற்றி வைக்கவுள்ளார். மேலும் பல இடங்களில் அவர் பாமக கொடி ஏற்றவுள்ளார்.