தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மூத்த மகனான ரவீந்திரநாத் அதிமுக சார்பில் களமிறங்கியிருக்கிறார். தேர்தல் களத்தில் குதித்த ரவீந்திரநாத் தொகுதியில் உள்ள பட்டிதொட்டி எல்லாம் வாக்காளர்ளை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அதுபோல் துணை முதல்வரான ஓபிஎஸ்சும் தேர்தல் களத்தில் குதித்து வாக்காளர்களை சந்தித்து மகனுக்காக வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்த நிலையில் திடீரென ஓபிஎஸ்சின் மனைவி ராஜலட்சுமி மற்றும் ரவீந்திரநாத் மனைவி ஆனந்தி உள்பட ஓபிஎஸ் குடும்பத்தினர் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து ரவீந்திரநாத்திற்கு ஓட்டு போடச் சொல்லி இருகரம் கூப்பி ஓட்டு கேட்டு வருகிறார்கள்.
இதுவரை நான்கு முறை ஓபிஎஸ் தேர்தல் களத்தில் குதித்து வாக்காளர்களை சந்தித்து இருக்கிறார். அப்போதெல்லாம் ஓபிஎஸ்சின் மனைவியோ மற்ற உறவினர்களோ தேர்தல் களத்தில் குதித்து ஓட்டு கேட்க ஆர்வம் காட்டவில்லை. தற்பொழுது ஓபிஎஸ் மகன் தேர்தல் களத்தில் குதித்து இருப்பதால் ஒட்டுமொத்த குடும்பமே வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்டு வருவது தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
.