Skip to main content

ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் 

Published on 24/11/2018 | Edited on 24/11/2018


 

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய, மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, இன்று (24.11.2018) காலை 10.30 மணியளவில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 

ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய வைகோ, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்களையும் விடுவிப்பதில் அலட்சியம் காட்டிவரும் ஆளுநரை எதிர்த்து, டிசம்பர் 3 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். 
 

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி, ம.தி.மு.க. பொருளாளர் ஈரோடு கணேசமூர்த்தி, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்தியா, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் டி.ஆர்.செங்குட்டுவன், மணி வேந்தன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 
News Hub