Published on 21/04/2018 | Edited on 21/04/2018

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் விடுதலை கழகம், விடுதலை சிறுத்தைகள், மே 17 இயக்கம் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து கோவை ரயில் நிலையத்தின் வெளியே தர்ணா போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதே போன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் முற்றுகை போராட்டம் நடைபெற்றுள்ளது. போராட்டம் நடக்கும் இடங்களில் பல காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளதால் காவலர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது..